வங்கியில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் மூவரின் மோசமான செயல் அம்பலமான தகவல்
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு உதவி அதிகாரி மற்றும் இரண்டு இடைநிலை நிர்வாக அதிகாரிகள் உள்ளடங்குகின்றதாக கூறப்படுகின்றது.
போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி மோசடி
குறைந்த மதிப்புள்ள தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து அடமான பத்திரங்களில் போலி கையொப்பங்களைப் பயன்படுத்தி மூவரும் 99,370,100 ரூபாவை மோசடி செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவின் நிதிப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விடயம் வெளிவந்துள்ளது.
உதவி பணியாளர் அதிகாரியாக பணியாற்றிய 36 வயது பெண், பாணந்துறையில் வசிப்பவர் என்றும், 37 வயது இளைய நிர்வாக அதிகாரி ஒருவர் தலதாவத்த வீதியில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான 36 வயதான மற்றுமொரு அதிகாரி பாணந்துறை, விஹார வீதியில் வசிப்பவர் எனவும், சந்தேகநபர்களின் வீட்டில் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் மூவரும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான சந்தேக நபர்கள் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையின் நிதி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தி வருகிறது.
Tags:
srilanka
