தீவிரமடையும் ஈரான் - இஸ்ரேல் மோதல் : மசகு எண்ணெய் விலையில் கணிசமான உயர்வு!
மத்திய கிழக்கில் நிலவும் போர்முனை சூழ்நிலையும், ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான பதற்றமும் காரணமாக, மசகு எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்வைப் பதிவிடுகின்றன.
உலக சந்தையில் WTI வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.38 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. அதேவேளை, பிரெண்ட் வகை எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.45 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மற்றொரு பக்கத்தில், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.88 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
Tags:
world
