தாயின் கொடூரம்: பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த சம்பவம் – பகீர் தகவல்கள் வெளிச்சம்
பச்சிளம் பெண் குழந்தையை கொன்று புதைத்த தாய் கைது – ஆண் குழந்தை பிறக்காததால் உயிரிழந்த தாய்மை!
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில், பிறந்து வெறும் நான்கு நாட்களான பெண் குழந்தையை கொன்று வீட்டின் பின்புறம் புதைத்த தாயைக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில், பாலமுருகன் – சிவசக்தி தம்பதிக்கு ஏற்கனவே 5 வயதான பெண் குழந்தை ஒருவர் உள்ள நிலையில், சமீபத்தில் மீண்டும் பெண் குழந்தை பிறந்திருந்தது. குழந்தை மற்றும் தாயின் உடல்நிலை நலமாக இருந்தபோதிலும், ஏப்ரல் 20ஆம் திகதி அந்த குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னர், குழந்தையின் உடல் வீட்டின் பின்புறம் ரகசியமாக புதைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான தகவலைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட பொலிஸாருக்கு தாய் சிவசக்தி பதிலளிக்கும்போது உண்மைகள் அம்பலமானதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணையில், ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆத்திரத்தில் தான் இந்த செயலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் நடந்த இடத்தைக் காட்டு அவரால், குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, உடனே பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Tags:
india
.png)