யாழ்ப்பாண யூட்யூப்பர் கிருஷ்ணா மீது நீதிமன்ற உத்தரவு – விசாரணையில் புதிய திருப்பம்!
யாழ்ப்பாண யூட்யூப்பர் கிருஷ்ணாவுக்கு பிணை அனுமதி – சர்ச்சை காணொளி விவகாரத்தில் புதிய முன்னேற்றம்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த யூட்யூப்பர் கிருஷ்ணாவை பிணையில் விடுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவரை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று (23) நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விவாதத்திற்கு உள்ளான காணொளி:
பருத்தித்துறை பகுதியை சேர்ந்த இளைஞரான கிருஷ்ணா, வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களிடமிருந்து நிதியுதவி பெற்று, வறியவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறும் காணொளிகளை தனது யூட்யூப் தளத்தில் பகிர்ந்து வந்துள்ளார்.
இந்தச் செயற்பாடுகள் பெரும்பாலானோரால் வரவேற்கப்பட்டாலும், சமீபத்தில் வெளியான ஒரு காணொளியில் பெண்ணொருவரை அவமதிக்கும் வகையில் உரையாடல் இடம்பெற்றிருந்ததால் அது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
சம்பந்தப்பட்ட காணொளி நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக, காணொளியில் இடம்பெற்ற பெண்ணின் குடும்பத்தினரது வீட்டிற்கு யூட்யூப்பர் கிருஷ்ணா சென்றபோது, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டார்.
தற்போது, நீதிமன்றத்தின் பிணை உத்தரவுடன், வழக்கு தொடரும் நிலையில் கிருஷ்ணா வெளியில் வந்துள்ளார்.
Tags:
srilanka
