யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக கஞ்சா விற்பனை: சுகாதார தொழிலாளி கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சுகாதார தொழிலாளி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று (21) நடைபெற்ற இச்சம்பவத்தில், பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வைத்தியசாலை முன்றலில் சோதனை மேற்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோதனையின் போது, அவரது உடமையில் இருந்து 25 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சந்தேக நபர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
