பயங்கர விபத்து: 300 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – சாரதி காயம்

 



நல்லதன்னியிலிருந்து கினிகத்தேனை, பொல்பிட்டிய நோக்கிச் சென்ற கார் ஒன்று சுமார் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் மோட்டார் வாகன சாரதி படுகாயமடைந்து, லக்சபான பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து இன்று (22) காலை 7.15 மணியளவில், நல்லதன்னி – கினிகத்தேனை பிரதான வீதியின் நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்றது.

பயணித்துக் கொண்டிருந்த காரில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறால், சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் கார் வீதியை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.