தம்புள்ளை வீதியில் இரு லொறிகள் மோதி விபத்து: இளைஞன் உயிரிழப்பு, மூவருக்கு காயம்
குருணாகல் – தம்புள்ளை வீதியில் தம்படவத்த பிரதேசத்தில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என்று தொரட்டியாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, குருணாகலிலிருந்து தம்புள்ளை நோக்கிப் பயணித்த மற்றொரு லொறியுடன் மோதியதில் இடம்பெற்றது.
விபத்தின் போது, தம்புள்ளையிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த லொறியில் இருந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்தவர் யட்டிகல்பொத்த, கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஆவார்.
மேலும், இந்த விபத்தில் காயமடைந்த மூவர் குருணாகல் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொரட்டியாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka
.png)