ஒரே நாளில் வரலாறு காணாத உயர்வு — தங்கத்தின் விலை ஆச்சரியம்!

 


தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் மிகப்பெரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை

இது ஒரே நாளில் ஏற்பட்ட 5.16 சதவீத அதிகரிப்பாகும்.

உலக சந்தையின் இந்த விலை அதிகரிப்பு இலங்கையின் தங்க ஆபரண சந்தையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விற்பனையாளர் சங்க பொருளாளரின் தகவலின்படி, இன்று 24 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 5000 ரூபாவினால் அதிகரித்து 277,000 ரூபாவாக விற்பனையாவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை பவுணுக்கு 3000 ரூபாவினால் அதிகரித்து 255,000 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் மாத்திரம் ஆபரண தங்கத்தின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.