ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு: நீதிமன்ற வளாகத்தில் மின்சாரம் துண்டிப்பு!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வரும் நீதிமன்ற அறை வளாகத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

தற்போது வரை மின்சாரம் வழமைக்குத் திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, வழக்கின் தீர்ப்பை அரை மணி நேரம் ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.  

மாலை 5.30 மணியளவில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.