காஸாநகர் மீது இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல் ஆரம்பம்!


காஸாநகரத்தை முழுமையாகக் கைப்பற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக இஸ்ரேலிய இராணுவம் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்  செய்திவெளியிட்டுள்ளன.

காஸா பகுதியின் புறநகர்ப் பகுதிகளை இஸ்ரேல் ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

காஸா நகரத்தைக் கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்திருந்ததோடு இந்த நடவடிக்கைக்காக சுமார் 60,000 கூடுதல் துருப்புக்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.