மின்சார சபை ஊழியர்களின் உரிமை – சலுகைகள் தொடர்பில் விசேட கவனம்


இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான சட்டத்திருத்தம் மற்றும் திட்டம் தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் வலுசக்தி அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தப்பட்டதாக வலுசக்தி அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையுடன் தொடர்புடைய 42 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த கலந்துரையாடலில் சேருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.