தங்க நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ் : குறைந்தது தங்கத்தின் விலை!


நாட்டில் கடந்த சில வாரங்களாக உயர்வடைந்த நிலையில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்றையதினம்(18) சடுதியாக குறைவடைந்த நிலையில் பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 1,016,790 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் 35,870 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 286,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் 32,890 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண் 263,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.