எரிபொருள் விலை குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு!


ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை நிர்ணயக் குழு நாளைய தினம் (30) கூடவுள்ள நிலையில், இறுதி தீர்மானம் எடுக்கப்படவிருக்கிறது. இருப்பினும், விலையில் எந்தவொரு குறிப்பிடத்தக்க மாற்றமும் எதிர்பார்க்கப்படவில்லை என கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே கூறியுள்ளார்.

கடந்த மாத விலை நிலவரம் மற்றும் சமீபத்திய எரிபொருள் இறக்குமதிகளின் விலையை கருத்தில்கொண்டு விலை நிர்ணய குழு தீர்மானங்களை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.