தந்தையின் செயலால் மனமுடைந்து போன மகன் எடுத்த விபரீத முடிவு!


பதுளை, எட்டம்பிட்டிய பிரதேசத்தில் தந்தை திட்டியதால் மகன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மகன் படிப்பதை விட கணினி விளையாட்டுகளை விளையாடுவதில் அதிக நேரம் செலவிட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த தந்தை வேலைக்கு சென்று வீடு திரும்பிய நிலையில் மகனை திட்டியதுடன் கணினியை செருப்பால் அடித்துள்ளார்.


தந்தையின் செயலால் மனமுடைந்த 18 வயதுடைய மாணவன், உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் கசுன் கல்ஹார எனவும் அவர் இம்முறை க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தயாராகி வந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.