கள்ளக் காதலால் கணவனை கழுத்தை நெரித்துக் கொன்ற பெண்; விசாரணையில் பகீர் தகவல்
கள்ளக் காதலால் , பெண் யூடியூபர் கணவனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
இந்நிலையில் ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ரவீனா - சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்து மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள வடிகானில் வீசியுள்ளனர்.
பின்னர் சடலம் மார்ச் 28ஆம் திகதி அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின் பொலிஸார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர்.
Tags:
india
