மீன் பாண் துண்டு தொண்டையில் சிக்கி முதியவர் பலி!
கொழும்பு - ஹோமாகம, பிட்டிபன தெற்கு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மீன் பாண் துண்டு தொண்டையில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹோமாகம, பிட்டிபன தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஆவார்.
சம்பவத்தன்று உயிரிழந்த முதியவரின் குடும்பத்தினர் காலை உணவுக்காக மீன் பாண் வாங்கியுள்ளனர்.
முதியவர் மீன் பாணை சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது திடீரென சுகயீனமுற்றுள்ளார்.
பின்னர் முதியவரை அம்பியூலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்த முதியவர் பார்கின்சன் என்ற நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka
