லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்!


லாஃப் சமையல் எரிவாயுவின் ஜூலை மாதத்துக்கான விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என லாஃப் எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் லாஃப் எரிவாயுவின் விலை திருத்தத்தின்படி,

12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவாலும் 5 கிலோ சிலிண்டரின் விலை 168 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டது. 

அந்த விலையுயர்வின் அடிப்படையில்,  12.5 கிலோ எரிவாயு சிலிண்டர் 4,100 ரூபா எனவும் 5 கிலோ சிலிண்டர் 1,645 ரூபா எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து, மே, ஜூன் மாதங்களில் லாஃப் எரிவாயு விலைகள் மாற்றப்படவில்லை. 

இந்நிலையில், இந்த மாதமும் விலையில் திருத்தம் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல 2025 ஜூலை மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனமும் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோ கிராம் 3,690 ரூபாவாகவும், 5 கிலோ கிராம்  1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ கிராம்  694 ரூபாவாகவும் விற்கப்படுகின்றது.