இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!
பதுளை - லுனுவத்த பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (21) காலை இடம்பெற்றுள்ளது.
இதனால் இரு பஸ்களின் சாரதிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறிருப்பினும் விபத்தின்போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் இரு பஸ்களும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
srilanka
