உயர்தர பரீட்சைக்கான திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 26 முதல் ஜூலை 21 வரை இணையவழியில் பெறப்படும் எனவும், விண்ணப்பதாரர்கள் www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஆகிய உத்தியோகபூர்வ வலைத்தளங்களை பார்வையிட்டு, வழிமுறைகளைப் படித்து, சரியான முறையில் விண்ணப்பிக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

விண்ணப்பங்களை ஜூலை 21 நள்ளிரவு 12.00 மணிக்குள் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திகதிக்கு பிறகு விண்ணப்பங்களை ஏற்க முடியாது என்றும், இறுதித் திகதி எந்தக் காரணத்திற்காகவும் நீட்டிக்கப்படாது என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஏதேனும் சந்தேகம் அல்லது உதவிக்கு, விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளலாம்.

📞 011-2784208 / 011-2784537 / 011-2785922

📞 துரித சேவை இலக்கம்: 1911

📧 மின்னஞ்சல்: gcealexam@gmail.com