மட்டக்களப்பில் அதிகாலையில் பெண்மணிக்கு நேர்ந்த பயங்கரம்!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை பகுதியில் இன்று (02) அதிகாலை காட்டுயானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாந்தாமலை, ரெட்பானா கிராமத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான மாமாங்கம் சந்திரா என்பவரே இந்த சம்பவத்தில் பலியானவராவார்.
பெண்ணை தாக்கிய காட்டு யானை
தனது வீட்டு வளவினுள் புகுந்த யானைகளைக் கண்டு குறித்த பெண் உயிர் தப்புவதற்காக ஓடிய போது காட்டு யானை மறித்து தாக்கியதில் இவர் உயிரிழந்துள்ளார் என தெரிய வருகின்றது.
Tags:
srilanka
