ஐரோப்பிய வாழ் குடும்ப பெண்ணுடன் யாழ் குடும்பஸ்தர் தலைமறைவு; கண்ணீர் விடும் மனைவி பிள்ளைகள்
யாழில் 31 வயதான இளம் குடும்ஸ்தர் ஒருவர், ஐரோப்பிய நாடொன்றில் வாழும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலம் பெயர் தமிழ் குடும்ப பெண்ணுடன் மாயமாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஐரோப்பிய நாடொன்றில் வாழும் 40 வயதை கடந்த குறித்த பெண்ணுக்கு திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளதாகவும், கணவனை விவாகரத்துச் செய்து வாழ்ந்து வந்ததகவும் கூறப்படுகின்றது.
தனது 7 மாதக் குழந்தை உட்பட 3 பிள்ளைகளையும் மனைவியையும் கைவிட்டு மனைவி பிள்ளைகளை கைவிட்டு குடும்பப் பெண்ணுடன் கணவன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதற்கு மறுப்பு தெரிவித்த மனைவி, உடனடியாக வீடு திரும்புமாறு கோரிய போது தனது தொலைபேசி இணைப்பை தடை செய்துவிட்டார் என மனைவி கூறுகின்றார்.
கொழும்பில் இருவரும் பதிவுத் திருமணம்
அதேவேளை கணவனின் உறவுகளும் தொடர்பு கொண்ட போதும் கணவர் தன்னை தேடவேண்டாம். தான் வெளிநாடு சென்ற பின் தொடர்பு கொள்கின்றேன் என அவர்களுக்கும் கூறி இணைப்பை துண்டித்துள்ளாராம்.
இந்நிலையில் தற்போது கணவனை வெளிநாடு செல்லவிடாது தடுப்பதற்கு பொலிசாரின் உதவியை நாடி அவரது பாஸ்போட்டை நீதிமன்றம் மூலம் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக மனைவி தெரிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
jaffna