இலங்கையில் கீர்த்தி சுரேஷை பார்க்க ரசிகர்கள் பெரும் கூட்டம்!
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளாராம்.
ஆனால் அவர் சென்றது படப்பிடிப்பு காரணமாகவும், சுற்றுலா காரணமாகவும் அல்ல.
மாறாக, ஒரு புதிய கடையை திறந்து வைக்கும் விழாவுக்காகவே அவர் இலங்கை பயணம் செய்துள்ளார்.
குவிந்த ரசிகர்கள்!
இலங்கையில் நடைபெற்ற கடை திறப்பு விழாவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் கிளாமராக காட்சியளிக்கும் உடையில் வந்துள்ளார்.
அவரை ஒரே பார்வையயில் பார்க்க அதிக அளவிலான ரசிகர்கள் கூடி, அங்கு பெரிய கூட்டம் உருவானது.
காரிலிருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அந்த கூட்டத்துக்குள் அழைத்துச் செல்ல பவுன்சர்கள் கடுமையாக பாடுபட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மேலும், மேடையில் கீர்த்தி சுரேஷ் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின்றன.
